KANYAKUMARI JAWANS
கன்னியாகுமரி ஜவான்ஸ் இயக்கம்
Kanyakumari Jawans Movement Founder: Baiju T This movement operates as an organization dedicated
KANYAKUMARI JAWANS
Kanyakumari Jawans Movement Founder: Baiju T This movement operates as an organization dedicated

A/c:Number : 272402000008811
IFSC : IOBA0002724
Branch: Attoor
Bank :IOB

கன்னியாகுமரி ஜவான்ஸ் அமைப்பு, ஒரு வாட்ஸ்அப் குழுவில் தொடங்கி மாவட்ட அளவில் பெரும் இயக்கமாக உருவெடுத்த வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள்👇🏻
வாட்ஸ்அப் குழு தொடக்கம்
18 பிப்ரவரி 2018
BSF வீரர் லட்சுமணன் சைஜூ கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இராணுவ வீரர்களை இணைத்து ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினார். நிர்வாகியாகச் செயல்பட்ட பைஜூ.த மேலுமொரு 100-க்கும் மேற்பட்ட வீரர்களை இதில் இணைத்தார்.
புல்வாமா அஞ்சலி & முதல் சமூகப்பணி
14 பிப்ரவரி 2019
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணமடைந்ததைத் தொடர்ந்து, விடுமுறையில் இருந்த பைஜூ.த மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன் அஞ்சலி பேனர் வைத்தார். பின்னர் "நாட்டைக் காப்போம்; விடுமுறையில் மாவட்டத்தைக் காப்போம் Clean & Green" என்ற முழக்கத்துடன் குழித்துறை மற்றும் அழகியமண்டபம் பேருந்து நிலையங்களைச் சுத்தம் செய்து மரக்கன்றுகளை நட்டனர். ஊடக வெளிச்சத்தால் 6,200-க்கும் மேற்பட்ட ஜவான்ஸ்கள் குழுவில் இணைந்தனர்.
விளையாட்டுப் போட்டி{கோணம் பால் டெக்னிக் கல்லூரி} காவல் துறை மோதல்
15 ஆகஸ்ட் 2019
கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். அன்றைய தினம் மாங்காவிளை CRPF வீரர் சஜின் விபத்தில் சிக்கிய வழக்கு தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையம் சென்ற இராணுவ வீரர்கள் ஜோசப் சாண்டினோ மற்றும் அருண் பைஜூ
ஆகியோர் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.
நலச்சங்கமாகப் பதிவு
2020
காவல்துறை தாக்குதல் குறித்து ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், தங்கள் உரிமைகளையும் நலன்களையும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்க வாட்ஸ்அப் குழுவை "கன்னியாகுமரி ஜவான்ஸ் நலச்சங்கம்" ஆகப் பதிவு செய்தனர்.
இயக்கமாக உருவெடுத்தல்
15 ஆகஸ்ட் 2026
ஆறு ஆண்டுகள் பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்தும், எந்த அங்கீகாரம் கிடைக்காமலும் இராணுவ வீரர்களின் குறைகள் மற்றும் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால், வீரர்களின் உரிமைகளுக்காகப் போராட பைஜூ.த "தலைமையில் கன்னியாகுமரி ஜவான்ஸ் இயக்கம்" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகள் சமூக பணிகளை மேற்கொள்ளும் ஒரு சாதாரண சங்கங்மாக செயல் பட்டது ஏழாவது ஆண்டு ஆகஸ்ட் 15, 2026 அன்று ஒரு பெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்த நிகழ்வு, நாட்டின் பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்த முன்னாள் மற்றும் தற்போதைய ராணுவ வீரர்களின் நலனுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் சாதனைகள்:
திரண்ட உறுப்பினர்கள்: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சுதந்திர தினத்தன்று ஒன்றுதிரண்டு சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் விழிப்புணர்வு மற்றும் நலத்திட்டப் பேரணியில் பங்கேற்றனர்.
முக்கிய கோரிக்கைகள்: ஓய்வூதிய சிக்கல்களைத் தீர்ப்பது, முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கான வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவ உதவிகளை தடையின்றி வழங்குவது தியாகிகளின் பிள்ளைகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் பாதுகாப்பு ஆகியவை இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கங்களாக முன்வைக்கப்பட்டன.
சமூகப் பங்களிப்பு: சுதந்திர தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ரத்ததான முகாம்கள் நடத்துதல் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களை கௌரவித்தல் போன்ற சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த மாபெரும் கூடுகை, கன்னியாகுமரி ஜவான்ஸ் நலச்சங்கத்தை வெறும் ஒரு அமைப்பாக மட்டுமில்லாமல், வீரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு வலிமையான மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது.
மக்களின் ஆதரவையும், ராணுவ வீரர்களின் ஒழுக்கத்தையும் அடித்தளமாகக் கொண்டு இயங்கும் இயக்கம் அமைப்புகள் அரசியலில் களம் காண்பதும், தேர்தல் களத்தில் வெற்றியை எதிர்பார்ப்பதும் ஒரு இயல்பான அரசியல் நகர்வாகும்.
கன்னியாகுமரி ஜவான்ஸ் இயக்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வாய்ப்புள்ள சாதகமான காரணிகள்:
மக்களின் நம்பிக்கை: முன்னாள் ராணுவ வீரர்கள் மீதும், அவர்களின் நேர்மையான சேவை மனப்பான்மை மீதும் பொதுமக்களுக்கு இருக்கும் இயல்பான மரியாதையும் நம்பிக்கையும்.
ஒழுக்கமான கட்டமைப்பு: ராணுவப் பின்னணி கொண்டவர்களால் வழிநடத்தப்படுவதால், வலுவான ஒழுக்கமும், முறையான திட்டமிடலும் தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படும்.
சமூகப் பணிகள்: மக்கள் நல திட்டங்கள், வெள்ள நிவாரணப் பணிகள் மற்றும் பகுதிசார்ந்த பிரச்சனைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பது வாக்குகளாக மாறும்.
காரணிகள் மற்றும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்:
வெற்றிக்குச் சாதகமான :
அரசியல் அனுபவம்: பல தசாப்தங்களாகக் களத்தில் உள்ள பாரம்பரியக் கட்சிகளின் வாக்கு வங்கியையும், அவர்களின் வலுவான பூத்-மட்ட (Booth level) அரசியல் கட்டமைப்பையும் எதிர்கொள்வது.
பிரச்சார வியூகம்: சமூக சேவை அமைப்பாக இருந்த நிலை மாறி, அரசியல் ரீதியான கொள்கைகள் மற்றும் தொகுதி மேம்பாட்டுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, அடிமட்ட அளவில் வலுவான பிரச்சாரக் கட்டமைப்பை அமைக்கும் பட்சத்தில், தேர்தல் களத்தில் இத்தகைய இயக்கங்கள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தீர்க்கும் விதமாக ஆட்சியில் பதவி பங்கு தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் வெற்றி வாகை சூடும்
We deliver exceptional results in everything we do, ensuring your satisfaction at every step.
Our experienced team brings skill and passion to every project, no matter the size.
Proven outcomes that speak for themselves and make a meaningful difference for your business.
We love our customers, so feel free to visit during normal business hours.
Open today | 09:00 am – 05:00 pm |

Sign up to hear from us about specials, sales, and events.
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.